430 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்


430 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
x
தினத்தந்தி 30 Sep 2023 6:45 PM GMT (Updated: 30 Sep 2023 6:45 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் 430 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நாளை நடக்கிறது

திருவாரூர்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருவாரூர் மாவட்டத்தில் 430 கிராம ஊராட்சிகளிலும் நாளை (திங்கட்கிழமை) காந்தி ஜெயந்தியையொட்டி கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளது. இதில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொதுநிதி செலவினம், தணிக்கை அறிக்கை, மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்துதல் குறித்து விவாதிக்கப்படுகிறது. மேலும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், டெங்குகாய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், கிராம ஊராட்சிகளில் சுத்தமான குடிநீர் வினியோகத்தினை உறுதிசெய்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், தூய்மைபாரத இயக்கம் (ஊரகம்) மற்றும் இதர தலைப்புகளில் விவாதிக்கப்பட உள்ளது. கிராம ஊராட்சிகள் அனைத்து நிலைகளிலும் தன்னிறைவை பெறும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள், திட்ட பணிகள் தேர்வு, பயனாளிகள் தேர்வு குறித்து விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. எனவே கிராம சபை கூட்டத்தில் அனைத்து தரப்பு பொதுமக்களும் தவறாமல் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவிப்பதோடு, தங்கள் ஊராட்சியின் வளர்ச்சியில் தங்கள் பங்களிப்பையும் முழுமையாக வழங்கிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story