மதுரையில் ஊராட்சி பகுதிகளில் கிராம சபை கூட்டம்


மதுரையில் ஊராட்சி பகுதிகளில் கிராம சபை கூட்டம்
x

மதுரை வாடிப்பட்டி , திருப்பரங்குன்றம் பகுதிகளில் காந்தி ஜெயந்தியையொட்டி கிராம சபை கூட்டம் நடந்தது.

மதுரை

சோழவந்தான்


காந்தி ஜெயந்தி

வாடிப்பட்டி ஒன்றியம் மன்னாடிமங்கலம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கிராம மக்களின் அடிப்படை வசதி குறித்து பலர் பேசினா். இதுகுறித்து வெங்கடேசன் எம்.எல்.ஏ. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கிராம மக்கள் குறைகளை சரிசெய்ய உத்தரவிட்டார். இதில் மாவட்ட வழங்கல் அதிகாரி முருகவள்ளி, தாசில்தார் மூர்த்தி, மண்டல துணை தாசில்தார் வருவாய் அலுவலர் சதீஷ், கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன், என்ஜினீயர் மூர்த்தி, வனத்துறை, சுகாதாரத்துறை, கல்வித்துறை உள்பட பல்வேறு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.ஊராட்சி மன்ற தலைவர் பவுன்முருகன், ஒன்றிய கவுன்சிலர் ரேகாவீரபாண்டி, துணைத் தலைவர் பாக்கியம்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கதிரவன் திட்டப் பணிகள் குறித்து பேசினார். ஊராட்சி செயலாளர் திருச்செந்தில் அறிக்கை வாசித்தார்.

இதேபோல் காடுபட்டி ஊராட்சியில் தலைவர் ஆனந்தன் தலைமையில், முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் தலைவர் பழனிவேல் தலைமையில், துணைத் தலைவர் கேபிள் ராஜா முன்னிலையில், தென்கரை ஊராட்சியில் தலைவர் மஞ்சுளா ஐயப்பன் தலைமையில், துணைத் தலைவர் கிருஷ்ணன் முன்னிலையில், திருவாலவாயநல்லூர் ஊராட்சியில் தலைவர் சகுபர்சாதிக் தலைமையில், மேலக்கால் ஊராட்சியில் தலைவர் முருகேஸ்வரிவீரபத்திரன் தலைமையில், துணைத் தலைவர் சித்தாண்டி முன்னிலையில் கிராம சபை கூட்டம் நடந்தது. அந்தந்த ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் அறிக்கை வாசித்தனர்.

கிராம சபை கூட்டம்

திருப்பரங்குன்றத்தை அடுத்த வேடர் புளியங்குளத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன்தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கோபால், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய உதவியாளர் கலைச்செல்வன்ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர்வேல்முருகன்வரவேற்றுதீர்மானங்களை வாசித்தார்.கூட்டத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பலர்கலந்து கொண்டனர்.வேடர் புளியங்குளம் விஸ்தரிப்பு பகுதி யில்தெருவிளக்குகள்அமைக்க வேண்டும் என்றுபொதுமக்கள் வலியுறுத்தினர்.

கார்சேரி

கார்சேரி ஊராட்சியில் மீனாட்சி நகர் காலனி பகுதியில் உள்ள பள்ளி கட்டிடத்தில் ஊராட்சி தலைவர் பாண்டீஸ்வரி இளவரசன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் துணைத் தலைவர் விஜி ராஜா மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் ராஜபிரபு கிராம சபை கூட்டத்தில் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் வருவாய், சுகாதாரம் மற்றும் அரசின் பல்வேறு துறைகளில் உள்ள அலுவலகர்களும் கலந்து கொண்டனர்.


Next Story