மாப்பிள்ளை காதலியுடன் ஓட்டம் ...! கண்களில் கனவுகளோடு காத்திருந்த மணப்பெண் ஏமாற்றம்...!


மாப்பிள்ளை காதலியுடன் ஓட்டம் ...! கண்களில் கனவுகளோடு காத்திருந்த மணப்பெண் ஏமாற்றம்...!
x

இருவிட்டார் உறவினர்களும் பெண் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாப்பிள்ளை சதேஷ்குமர், மணப்பெண்ணை வாழ்த்தி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த குமிழி கிராமம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த உமாபதி , மகாலட்சுமி ஆகியோரின் மகன் சதீஷ்குமார் என்பவருக்கும், செங்கல்பட்டு மெய்யூர் கிராமத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் இரு வீட்டார் சம்மத்ததுடன் கடந்த 5 மாதத்திற்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் இரு வீட்டார் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

நிச்சயதார்த்தம் முடிந்த நாளிலிருந்து மாப்பிள்ளை சதிஷ்குமார் மணப்பெண்ணிடம் சரிவர பேசவில்லை மணப்பெண் போன் செய்தாலும் பதிலளிக்காமல் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையில் பெண் வீட்டார் மாப்பிள்ளை விட்டாரிடம் இது குறித்து பலமுறை கூறியும் சரியான காரணத்தையும் சொல்லாமல் மறைதுள்ளனர். இந்நிலையில் இரு விட்டார் முறைபடி பத்திரிக்கை அடித்து அனைத்து உறவினர்களுக்கும் அழைப்பிதழ் கொடுத்த பின்னர் சம்பவத்த்ன்று இரவு திருப்போரூர் அடுத்த கொட்டமேடு பகுதியில் அமைந்துள்ள குமாரசாமி தனியார் திருமண மண்டபத்தில் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக தொடங்கியது.

இருவிட்டார் உறவினர்களும் பெண் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாப்பிள்ளை சதேஷ்குமர், மணப்பெண்ணை வாழ்த்தி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.

இந்நிலையில் காலை திருமணத்திற்கு திருமண மேடையில் அய்யர் தாலி, தேங்காய் பூ மாலையுடன் நலங்கு வைத்து மந்திரம் ஓதிக் கொண்டு இருந்தார். மணப்பெண்ணை அமரவைத்து காத்திருந்தார்.

அப்போது மாப்பிளையை அழைத்தவாருங்கள் என கூற. மாப்பிள்ளையை போய் பார்த்த போது மணமகன் அறையிலிருந்த மாப்பிள்ளையை காணவில்லை. சினிமாவில் நடப்பது போல் அனைவரையும் பதறவைத்தது. பின்னர் அங்குள்ள இடங்களில் மாப்பிள்ளையை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மணவறையில் இருந்த மணப்பெண்ணிடம் நடந்தது என்ன என்பது தெரிவிக்கப்படாததால் மாப்பிள்ளையின் வருகைக்காக காத்திருந்து ஏமாற்றம் அடைந்தார். ஒரு கட்டத்தில் மாப்பிள்ளை மண்டபத்தில் இருந்து ஓட்டம் பிடித்தது தெரியவந்ததால், தலைகுனிந்து மனம் கலங்கி கண்ணீர் வடித்ததால் பெரும் சோகம் ஏற்பட்டது.இருவிட்டார் உறவினர்களும் பெண் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாப்பிள்ளை சதேஷ்குமர், மணப்பெண்ணை வாழ்த்தி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.

இது குறித்து திருப்போரூர் போலீஸ் நிலையத்தில் பெண் வீட்டார் புகார் அளித்தனர். மாப்பிள்ளை ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும் அதனை வரதட்சனைக்காக மாப்பிள்ளை வீட்டார் திட்டம் போட்டு மறைத்து ஏமாற்றியதாக குற்றஞ்சாட்டினர்.

இதில் 40 சவரன் தங்க நகை ஏசி, கட்டில், பீரோ, ரூ.1.50 லட்சம் மதிப்பில் 125 சிசி.யமகா பைக் உள்ளிட்ட திருமணத்திற்கு தேவையான அனைத்து சாமான்களும் வரதட்சணையாக கொடுத்தும் தங்கள் பெண்ணை மாப்பிள்ளை வீட்டார் ஏமாற்றியதாக புகார் அளித்துள்ளனர்.

திருப்போரூர் போலீசார் சம்பந்தப்பட்ட திருமண மண்டபத்திற்கு சென்று அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கண்களில் கனவுகளோடு காத்திருந்த மணப்பெண் கலங்கி கதறி அழுது கொண்டிருந்த நிலையில் காதலியுடன் ஓடிய மாப்பிள்ளையை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story