குரூப்-2 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும் - டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு


குரூப்-2 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும் -  டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு
x
தினத்தந்தி 29 Sep 2022 10:59 AM GMT (Updated: 2022-09-29T16:41:05+05:30)

குரூப்-2 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

சென்னை,

குரூப்-2 மற்றும் 2ஏ பதவிகளில் உள்ள 5,529 காலி பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு கடந்த மே 21-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை தமிழகம் முழுவதிலும் இருந்து 9 லட்சத்து 94 ஆயிரத்து 890 போ் எழுதினர்.

இதே போல், 397 கிராம நிர்வாக அலுவலர், 2 ஆயிரத்து 792 இளநிலை உதவியாளர், 34 வரித்தண்டலர், 509 நில அளவையர், 74 வரைவாளர், 1,901 தட்டச்சர், 784 சுருக்கெழுத்து தட்டச்சர் உள்பட டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 பதவிகளில் உள்ள 7 ஆயிரத்து 301 பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஜீலை மாதம் 24-ம் தேதி நடைபெற்றது.

குரூப் 2 தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் மாதத்தில் வெளியிடப்பட்டு, முதன்மை எழுத்துத்தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில், குரூப்-2 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் (அக்டோபர்) வெளியாகும் எனவும், குரூப்-4 தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியாகும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.


Next Story