குரூப்-4 விவகாரம்: டி.என்.பி.எஸ்.சி இன்று அவசர ஆலோசனை - முக்கிய அறிவிப்பு வெளியாகுமா?


குரூப்-4 விவகாரம்: டி.என்.பி.எஸ்.சி இன்று அவசர ஆலோசனை - முக்கிய அறிவிப்பு வெளியாகுமா?
x

குரூப்-4 விவகாரம் தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி இன்று அவசர ஆலோசனை நடத்துகிறது.

சென்னை,

கடந்த வாரம் வெளியிடப்பட்ட குரூப்-4 தேர்வு முடிவுகள் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. சரியாக விடைத்தாள்களை மதிப்பீடு செய்யவில்லை என்றும், தேர்வு எழுதிய பல லட்சம் பேருக்கு தேர்வு முடிவுகள் வரவில்லை என்றும் பரபரப்பு புகார்கள் எழுந்துள்ளன.

தமிழ் தேர்வில் தோல்வி காரணமாக 5 லட்சம் பேருக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. முறைகேடுகள் காரணமாக குறிப்பிட்ட சில மையங்களில் அதிகம் பேர் தேர்வு பெற்றிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குரூப்-4 விவகாரம் சட்டசபையிலும் எதிரொலித்தது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று (புதன்கிழமை) காலை சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. தற்காலிக தலைவர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் உறுப்பினர்கள் மற்றும் முக்கிய அலுவலர்கள் பங்கேற்கின்றனர். கூட்டத்திற்கு பிறகு முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





Next Story