குரூப்-4 தேர்வு துளிகள்


பெரம்பலூரில் நடைபெற்ற குரூப்-4 தேர்வு துளிகள் விவரம் வருமாறு:-

பெரம்பலூர்


*குரூப்-4 தேர்வினை எழுத வந்த திருமணமான பெண்கள் தங்களது குழந்தைகளை மைய வளாகத்தில் தங்களது பெற்றோர், கணவரிடம் கொடுத்து விட்டு சென்றனர். அவர்கள் குழந்தையை கவனித்து கொண்டனர்.

* தேர்வு எழுத வந்த சில தேர்வாளர்களை அவர்களின் பெற்றோர் மையம் வரை அழைத்து வந்து விட்டு வாழ்த்தி ஆசீர்வாதம் வழங்கி வழியனுப்பி வைத்தனர்.

* தேர்வு எழுத வந்திருந்த மாற்றுத்திறனாளி, கர்ப்பிணி தேர்வாளர்களை அறைக்கு அழைத்து செல்வதற்கும், திரும்பி அழைத்து வருவதற்கும் தேர்வு மைய அலுவலர்கள் உதவிபுரிந்தனர்.

* சில தேர்வாளர்கள் தேர்வு அறைக்கு கடைசி நேரத்தில் புயல் வேகத்தில் ஓடி வந்ததை காணமுடிந்தது.

* தேர்வாளர்களில் முககவசம் அணிந்தவர்களை மட்டும் தேர்வு அறைக்கு செல்ல அனுமதித்தனர்.

* தேர்வாளர்கள் செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் தேர்வு அறைக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

* தேர்வு எழுதி வருவதற்கு வசதியாக சிறப்பு அரசு பஸ்களும் இயக்கப்பட்டன.

* பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நகராட்சி ஒப்பந்த பெண் துய்மை காவலர் ஒருவர் காலையில் வழக்கமான பணிகளை முடித்து விட்டு, பின்னர் அங்குள்ள தேர்வு அறைக்கு தேர்வு எழுத சென்றார்.

* தேர்வு மையத்துக்கு காலை 9 மணிக்கு மேல் வந்தவர்களை தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் அலுவலர்கள், போலீசாரிடம் நீண்ட நேரம் போராடியும் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் வீட்டிற்கு நடையை கட்டினர்.


Next Story