வாலிபரிடம் துப்பாக்கி பறிமுதல்
கமுதி அருகே வாலிபரிடம் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
ராமநாதபுரம்
கமுதி,
கமுதி அருகே கல்லுப்பட்டி நரிக்குறவர் குடியிருப்பை சேர்ந்தவர் தன்னாசி (வயது 34). இவரது வீட்டில் துப்பாக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் அங்கு சென்று சோதனையிட்டனர். அப்போது அங்கு வேட்டை துப்பாக்கி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த துப்பாக்கியை போலீசார் கமுதி போலீஸ் நிலையத்திற்கு எடுத்து வந்து தன்னாசியிடம் விசாரணை நடத்தினர். அப்போது துப்பாக்கிக்கு உரிமம் இருப்பதாக தன்னாசி தெரிவித்ததையடுத்து, அதை காண்பித்து விட்டு, துப்பாக்கியை பெற்றுக் கொள்ளுமாறு போலீசார் தெரிவித்தனர். ஆனால் 2 நாட்கள் ஆகியும் உரிமத்தை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்காததால், போலீசார் தன்னாசி, இவரது தம்பி கணேசன் (27) ஆகிய 2 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story