திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல்


திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல்
x

திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆரணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரதாபன், போலீஸ் ஏட்டுகள் தியாகராஜன், செல்லமுத்து ஆகியோருக்கு மினி வேனில் ஆரணிக்கு குட்கா கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆரணி எஸ்.பி கோவில் தெரு அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுவாயலில் இருந்து ஆரணி ஜி.என்.செட்டி தெரு நோக்கி வந்த மினி வேனை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது டிரைவர் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தார்.

அந்த வேனை சோதனை செய்தபோது குட்கா, புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். விசாரணையில் மினி வேன் டிரைவர் சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகர் பகுதியை சேர்ந்த சல்மான் ஷரீப் (வயது 34) என்பதும் ஆரணி ஜி.என்.செட்டி தெருவில் மளிகை கடை மற்றும் பால் வியாபாரம் செய்து வரும் இளவரசன் (32) என்பவரது கடைக்கு குட்கா, புகையிலை பொருட்கள் எடுத்துச் செல்வதையும் ஒப்புக்கொண்டார். போலீசார் அந்த கடையிலும் அதிரடி சோதனை செய்தனர். இதில் மொத்தம் ரூ.1 லட்சம் மதிப்புள்ள 82 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் இருவரையும் கைது செய்தனர்.


Next Story