மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்


மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Sept 2023 1:00 AM IST (Updated: 28 Sept 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தர்மபுரி

தமிழ்நாடு காது கேளாதோர், வாய் பேசாதோர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க மாவட்ட தலைவர் நித்யா தலைமை தாங்கினார். நிர்வாகிகள் திருஞானம், மணிகண்டன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கினார்கள்.

காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் ஆகிய மாற்று திறனாளிகள் தெரிவிக்கும் குறைகள், கோரிக்கைகளை எளிதாக புரிந்துகொண்டு அதிகாரிகளுக்கு தெரிவிப்பதற்கு கலெக்டர் அலுவலகம், நீதிமன்றங்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், அரசு ஆஸ்பத்திரிகள் உள்ளிட்ட இடங்களில் சைகை மொழிபெயர்ப்பாளர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய மாற்றுத்திறனாளிகள் வாட்ஸ்-அப் மூலம் தங்கள் கோரிக்கைகளை தெரிவித்தால் அது தொடர்பாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்க தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.


Next Story