கொசவபட்டியில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்


கொசவபட்டியில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 14 Oct 2023 3:00 AM IST (Updated: 14 Oct 2023 3:01 AM IST)
t-max-icont-min-icon

கொசவபட்டியில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் சாணார்பட்டி அருகே கொசவபட்டியில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. கொசவபட்டியில் உள்ள வட்டார சுகாதார நிலையத்தில், அனைத்து கட்டிடங்களிலும் கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைத்துத்தர வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் சாணார்பட்டி ஒன்றிய தலைவர் முருகன் தலைமை தாங்கினார்.

இதில், மாவட்ட தலைவர் ஜெயந்தி, மாவட்ட செயலாளர் பகத்சிங், ஒன்றிய செயலாளர் கருப்புசாமி, ஒன்றிய பொருளாளர் பழனியம்மாள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வட்டார மருத்துவ அலுவலர் அசோக்குமார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஒரு மாதத்திற்குள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைக்கப்படும் என்றார். இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

1 More update

Next Story