கைத்தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்
கைத்தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்
கோயம்புத்தூர்
கிணத்துக்கடவு
நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி கிணத்துக்கடவு அருகே உள்ள கோவில்பாளையத்தில் கைத்தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் கோவில்பாளையம் நல்லட்டிப்பாளையம், நெகமம், ஆதியூர், ஆண்டிபாளையம் உள்ளிட்ட பகுதியில் இருந்து வந்த கைத்தறி நெசவாளர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் கைத்தறிக்கு ஒதுக்கப்பட்ட 11 ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்வதை தடுக்க வேண்டும், சந்தையில் விற்கப்படும் போலி கைத்தறி சேலைகளை கட்டுப்படுத்த வேண்டும், சீராக சேலை உற்பத்தி செய்வதற்கு நூல்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், நூலுக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதையொட்டி கிணத்துக்கடவு இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி தலைமையிலான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story