என் உயிர்த்தம்பி இயக்குநர் அமீர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் - சீமான்


என் உயிர்த்தம்பி இயக்குநர் அமீர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் - சீமான்
x

இயக்குனர் அமீரின் பிறந்தநாளான இன்று அவருக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

சென்னை,

இயக்குனர் அமீர், ஆதிபகவன், பருத்திவீரன் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். இவர் வடசென்னை படத்தில் ராஜன் எனற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு திரை நட்சத்திரங்கள் அவருக்கு வாத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அவரது பிறந்தநாளுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,

ஆழ்ந்த சமூகப் பார்வையும், தனித்துவமான கலைக் கண்களும் நிறைந்த அசாத்திய திறமையாளன்! இயக்கம், நடிப்பு என பன்முகத் திறன் மிகுந்து முத்திரை பதிக்கும் திரைக்கலைஞன்! திரையில் மட்டுமல்ல, தரையிலும் மண்ணையும், மக்களையும் நேசித்து நிற்கும் உயரிய சிந்தனையாளன்!.

என் உயிர்த்தம்பி இயக்குநர் அமீர் அவர்களின் இந்தப் பிறந்தநாளில் பேரன்பு வாழ்த்துகளை மனம் நிறைந்து தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.



1 More update

Next Story