அறுவடை திருவிழா, நமது வளமான ஆன்மிக, பெருமைக்குரிய பாரம்பரியத்தின் வாழும் சாட்சி - கவர்னர் ஆர்.என்.ரவி பொங்கல் வாழ்த்து


அறுவடை திருவிழா, நமது வளமான ஆன்மிக, பெருமைக்குரிய பாரம்பரியத்தின் வாழும் சாட்சி - கவர்னர் ஆர்.என்.ரவி பொங்கல் வாழ்த்து
x

பண்டிகைகள் நமக்கு வளத்தையும் நல்ல ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் அளித்து உலகளாவிய சகோதரத்துவத்தை வளர்க்கட்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

சென்னை,

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்து இருப்பதாவது:-

பொங்கல், மகரசங்கராந்தி, உத்தராயன், பௌஷ்பர்வ, லோரி ஆகிய விசேஷமான தினங்களில் உலகெங்கிலும் உள்ள நமது சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாடு முழுவதும் ஒற்றுமையாக கொண்டாடப்படும் இந்த அறுவடை திருவிழா, நமது வளமான ஆன்மிக மற்றும் பெருமைக்குரிய பாரம்பரியத்தின் வாழும் சாட்சியாகும். மேலும், கலாசார ஒருமைப்பாடு மற்றும் பாரதத்தை ஒரே தேசமாக இவை வரையறுக்கின்றன.

இந்த பண்டிகைகள் நமக்கு வளத்தையும் நல்ல ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் அளித்து அமைதி, நல்லிணக்கம் மற்றும் உலகளாவிய சகோதரத்துவத்தை வளர்க்கட்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

1 More update

Next Story