கனமழை காரணமாக சுகாதார பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தல்


கனமழை காரணமாக சுகாதார பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தல்
x

அவசர கால மருத்துவர் குழுவும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

நெல்லை,

தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் 4 மாவட்டங்களிலும் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

அதி கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள 4 மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.

இந்த நிலையில் கனமழை காரணமாக தென் மாவட்டங்களில் சுகாதார பணியாளர்கள் தயார் நிலையில் இருக்குமாறு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மழை பாதிப்புள்ள பகுதிகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்குமாறு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவசர கால மருத்துவர் குழுவும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.


Next Story