கனமழை எதிரொலி: முதுமலை யானைகள் காப்பகம் 22ம் தேதி வரை மூடல்


கனமழை எதிரொலி: முதுமலை யானைகள் காப்பகம் 22ம் தேதி வரை  மூடல்
x

கடந்த சில நாட்களாகவே நீலகிரி மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது

சென்னை,

நீலகிரி மற்றும் சுற்று வட்ட மாவட்டங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே நீலகிரி மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கனமழை காரணமாக முதுமலை யானைகள் காப்பகம் 3 நாட்களுக்கு (ஜூலை 22) மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிப்பு, குடிநீர் தட்டுப்பாடு, மரங்கள் விழுவது ஆகியவற்றால் சுற்றுலாப் பயணிகளுக்கு வாகன சவாரி நிறுத்தப்படுவதுடன், யானை முகாமும் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story