அம்பையில் பலத்த மழை


அம்பையில் பலத்த மழை
x

அம்பையில் பலத்த மழை பெய்தது.

திருநெல்வேலி

அம்பை:

அம்பை, கல்லிடைக்குறிச்சி பகுதியில் நேற்று மாலை 4.45 மணியளவில் திடீரென பலத்த மழை பெய்தது. இந்த மழை 5.30 மணி வரை நீடித்தது. இதனால் பூமி குளிர்ந்து வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் விக்கிரமசிங்கபுரம் பகுதியிலும் சுமார் ¼ மணி நேரம் மழை பெய்தது.

குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 3 நாட்களாக சாரல் மழை பெய்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் மிதமான தண்ணீர் விழுந்து வருகிறது. நேற்று மாலையில் ஐந்தருவியில் திடீரென தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து சென்றனர்.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

பாளையங்கோட்டை-10, நெல்லை-1, களக்காடு-16, கொடுமுடியாறு-12, பாபநாசம்-1, நாங்குநேரி-1, மாஞ்சோலை-17, காக்காச்சி-40, நாலுமுக்கு-18, ஊத்து-45, குண்டாறு-5, அடவிநயினார்-2.


Next Story