அரியலூரில் கன மழை
அரியலூரில் கன மழை பெய்தது.
அரியலூர்
அரியலூரில் கடந்த ஒரு வாரமாக கடும் வெயில் மக்களை வாட்டி வந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் வானில் கருமேகங்கள் சூழ தொடங்கின. 3 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை, கன மழையாக பெய்தது. இதனால் நகரின் பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது. மார்க்கெட் தெரு முழுவதும் மழை நீர் நிரம்பி ஓடியதால் ஆறு போல் காட்சி அளித்தது. செந்துறை சாலையில் கழிவுநீர் கறுப்பு நிறத்தில் ஓடி வந்ததால் அந்த பகுதியே துர்நாற்றம் வீசியது. சாலை ஓர கடைகளில் இருந்த காய்கறிகள், பழங்கள், மக்காச்சோள கதிர்கள் நீரில் அடித்து செல்லப்பட்டன. பள்ளிவிடும் நேரம் என்பதால் மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தபடி வீட்டிற்கு சென்றனர். கனமழை பெய்ததால் நகரில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.
Related Tags :
Next Story