ஆழியாறில் பலத்த மழை:பஸ்சிற்குள் குடைப்பிடித்த பயணிகள்


ஆழியாறில் பலத்த மழை:பஸ்சிற்குள் குடைப்பிடித்த பயணிகள்
x
தினத்தந்தி 4 Dec 2022 6:45 PM GMT (Updated: 4 Dec 2022 6:46 PM GMT)

பொள்ளாச்சி அருகே ஆழியாறில் பலத்த மழை பெய்தது. பஸ்சிற்குள் ஒழுகியதால் பயணிகள் குடைபிடித்தபடி பயணம் செய்தனர்.

கோயம்புத்தூர்

ஆழியாறு

பொள்ளாச்சி அருகே ஆழியாறில் பலத்த மழை பெய்தது. பஸ்சிற்குள் ஒழுகியதால் பயணிகள் குடைபிடித்தபடி பயணம் செய்தனர்.

பஸ்சிற்குள் மழை

பொள்ளாச்சியில் இருந்து சமத்தூர், நா. மூ. சுங்கம், கோட்டூர் வழியாக ஆழியாருக்கு தடம் எண் 37 அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

இந்த நிலையில் பொள்ளாச்சி, ஆழியாறு பகுதியில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்தது. இதனால் பஸ்சிற்குள் ஆங்காங்கே மழைநீர் ஒழுக ஆரம்பித்தது. டிரைவரும் மழையில் நனைந்தபடி பஸ்சை ஓட்டி சென்றார். இதற்கிடையில் பயணிகள் மழையில் நனைவதை தடுக்க குடைப்பிடித்தப்படி பயணம் செய்தனர். மேலும் பஸ்சிற்குள் மழைநீர் வழிந்தோடியது. இதனால் பயணிகள் கடும் சிரமப்பட்டனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

நடவடிக்கை எடுக்கப்படுமா?

பொள்ளாச்சியில் இருந்து கோட்டூர் வழியாக ஆழியாருக்கு தடம் எண் 37 அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் பழுதடைந்து காணப்படுகிறது. இந்த நிலையில் (இன்று) நேற்று பெய்த மழையின் காரணமாக பயணிகள் பஸ்சில் குடைப்பிடித்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. இரவு நேரம் ஆனதால் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தால் பஸ்சிற்குள் குடைகளை பிடித்ததால் மிகவும் சிரமத்திற்கு இடங்களில் பயணம் செய்தனர். பல்வேறு கிராமங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் இதுபோன்ற பழுதடைந்த காணப்படுகிறது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கிராமங்களுக்கு செல்லும் பஸ்களின் நிலைகளை ஆய்வு செய்ய வேண்டும். வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் இதுபோன்ற பஸ்களை போக்குவரத்து தகுதியானதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.Next Story