கல்வராயன்மலை அடிவாரப்பகுதிகளில் கனமழை


கல்வராயன்மலை அடிவாரப்பகுதிகளில் கனமழை
x

கல்வராயன்மலை அடிவாரப்பகுதிகளில் கனமழை முஸ்குந்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு

மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக காலை முதல் மாலை வரை மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இரவு நேரங்களில் அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் கல்வராயன்மலை அடிவாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நீர் நிலைகளில் தண்ணீர் வேகமாக நிரம்பி வருகிறது. கனமழை காரணமாக கல்வராயன்மலை அடிவாரப் பகுதியான மூலக்காடு, ஆனைமடுவு, புளியங்கொட்டை, லக்கிநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதி வழியாக வரும் முஸ்குந்தா ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த வாரம் கத்திரி வெயில் துவங்கியது. ஆனால் அதிகளவில் வெயிலின் தாக்கம் இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது மிதமானது முதல் பலத்த மழை பெய்து வருவதால் சில நேரங்களில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இதனால் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பூமி குளிர்ந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது என்றார்.


Next Story