பெரம்பலூரில் பலத்த மழை


பெரம்பலூரில் பலத்த மழை
x

பெரம்பலூரில் பலத்த மழை பெய்தது.

பெரம்பலூர்

பெரம்பலூரில் நேற்று பகல் நேரத்தில் வானம் மேகமூட்டத்துடனே காணப்பட்டது. மதியம் 3 மணியளவில் சிறிது நேரம் பலத்த மழை பெய்தது. மீண்டும் இரவு 9 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக பலத்த மழையாக கொட்டி தீர்த்தது. அதனை தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்தது. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- செட்டிகுளம்-20, பாடாலூர்-2, அகரம்சீகூர்-1, லெப்பைகுடிகாடு-2, பெரம்பலூர்-12, எறையூர்-8, கிருஷ்ணாபுரம்-3, வி.களத்தூர்-8.


Next Story