பெரம்பலூர் மாவட்டத்தில் பலத்த மழை


பெரம்பலூர் மாவட்டத்தில் பலத்த மழை
x

பெரம்பலூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் முடிந்தும் வெப்பத்தின் தாக்கம் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. வெயிலை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வந்தனா். இந்த நிலையில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று மாலை 5.30 மணியளவில் பலத்த காற்று வீச தொடங்கியது. அதனை தொடர்ந்து சிறிது நேரம் பலத்த மழை பெய்தது. இதேபோல் இரவு 9 மணியளவில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை மீண்டும் பெய்தது. பின்னர் விட்டு, விட்டு மழை பெய்தது. இதனால் இரவில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டு வெப்பத்தின் தாக்கம் குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


Related Tags :
Next Story