கொட்டி தீர்த்த மழை


கொட்டி தீர்த்த மழை
x

திருச்சியில் கொட்டி தீர்த்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது.

திருச்சி

திருச்சியில் மழை

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து, இரவில் பனிப்பொழிவு அதிகமாக இருந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை 11 மணி அளவில் திருச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான தூறல் மழை பெய்தது. பகல் 12 மணிக்கு மேல் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது.

வீடுகளில் முடங்கிய மக்கள்

தொடர்ந்து அவ்வப்போது விட்டு, விட்டு மழை பெய்ததால் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதனால் சத்திரம் பஸ் நிலையம், மத்திய பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். மேலும், நேற்று விடுமுறை நாள் என்பதால் திருச்சியில் பெய்த மழைக்கு பெரும்பாலானவர்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர். இதனால் பல்வேறு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.


Next Story