சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை.!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துவருகிறது.
சென்னை,
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் இன்று தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் தற்போது கனமழை பெய்துவருகிறது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், வடபழனி, கோயம்பேடு, தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துவருகிறது.
இதனிடையே, சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்து உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், பெரம்பலூர், அரியலூர், சேலம், திருச்சி, சிவகங்கை, செங்கல்பட்டு, ராமநாதபுரம், நெல்லை, குமரி ஆகிய 12 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story