வேலாயுதம்பாளையம் பகுதியில் கனமழை


வேலாயுதம்பாளையம் பகுதியில் கனமழை
x

வேலாயுதம்பாளையம் பகுதியில் கனமழை பெய்தது.

கரூர்

வேலாயுதம்பாளையம், கூலக்கவுடனூர், கந்தம்பாளையம், மூலிமங்கலம், காகிதபுரம், புதுகுறுக்குபாளையம், செக்குமேடு, மூர்த்திபாளையம், புகழூர், நாணப்பரப்பு, செம்பாடம்பாளையம், தோட்டக்குறிச்சி, அய்யம்பாளையம், தளவாப்பாளையம், கடம்பங்குறிச்சி, மண்மங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது.

இதனால் பள்ளமான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. இந்த மழையால் வெயில் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story