வால்பாறையில் கொட்டித்தீர்த்த கனமழை-சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது


வால்பாறையில் கொட்டித்தீர்த்த கனமழை-சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது
x
தினத்தந்தி 5 April 2023 12:15 AM IST (Updated: 5 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறையில் கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

கொட்டித்தீர்த்த கனமழை

வால்பாறை பகுதியில் ஏப்ரல் மாதம் மே மாதங்களில் கோடை மழை பெய்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக கடந்த மாதம் 13-ந்தேதியில் இருந்து பல சமயங்களில் கனமழையாகவும், சில நேரங்களில் லேசான மழையாகவும் பெய்து வருகிறது. இந்த கோடை மழை காரணமாக தேயிைல செடிகளில் இலைகள துளிர்விட்டு உள்ளன. இதேபோல் நேற்றும் காலை முதல் மாலை 3 மணி வரை வானத்தில் மேகங்கள் திரண்டதோடு, மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. பின்னர் மாலை 3 மணிக்கு மேல் சாரல் மழை பெய்யத்தொடங்கியது. சிறிது நேரத்தில் இடியுடன் கூடிய கனமழையாக கொட்டித்தீர்ததது.

மார்க்கெட்டில் தேங்கிய மழைநீர்

இந்த மழை சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் மழைநீர் ெபருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக நகராட்சி மார்க்கெட் பகுதியில் நடைபாதை படிக்கட்டு மற்றும் சாலையில் மழைத் தண்ணீர் புகுந்ததால் பொது மக்கள் பொருட்களை வாங்குவதற்கு நடந்து செல்லமுடியாமல் ஆங்காங்கே மழைக்கு ஒதுங்கினர்.

கடந்த 22 நாளாக கோடை மழை பெய்து கொண்டிருப்பதால் பரம்பிக்குளம் -ஆழியாறு திட்டத்தின் முக்கிய அணையாக விளங்கும் சோலையாறு அணைக்கு தண்ணீர் வரத்து ஏற்படத் தொடங்கி வருகிறது.

இதனால் சோலையாறு மின் நிலையம் -1 ல் இருந்து மின் உற்பத்தி செய்யாமல் மாற்றுப் பாதை வழியாக 400 கன அடித் தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. சோலையாறு அணைக்கு வினாடிக்கு 61 கன அடித் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கடந்த 24 மணிநேரத்தில் கீழ் நீராறு அணையில் 15 மிமீ மழையும், மேல் நீராரில் 17 மிமீ மழையும், வால்பாறையில் 9 மிமீ மழையும் பெய்துள்ளது.


Related Tags :
Next Story