சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நீடிக்கும் கனமழை


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நீடிக்கும் கனமழை
x
தினத்தந்தி 18 Sep 2023 7:44 PM GMT (Updated: 18 Sep 2023 8:11 PM GMT)

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

சென்னை,

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் பகல் நேரங்களில் கடுமையான வெயிலும் மாலை மற்றும் இரவு நேரத்தில் திடீரென கனமழையும் பெய்து வருகிறது. சென்னை மட்டும் இன்றி தமிழ்நாடு முழுவதுமே பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த சூழலில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்திருந்தது.

சென்னையில் இன்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. திடீரென மாலையில் பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. சென்னை, கோயம்பேடு, சைதாப்பேட்டை, கிண்டி, ஆலந்தூர், ஆதம்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. மேலும் வேளச்சேரி, தரமணி, கந்தன்சாவடி, பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டியது.

இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமைழை பெய்து வருகிறது. இதன்படி சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அடையாறு, ராயப்பேட்டை, ஆழ்வார்பேட்டை, எழும்பூர், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, கிண்டி, புரசைவாக்கம், புளியந்தோப்பு, பெரம்பூர், கொடுங்கையூர், தண்டையார்பேட்டை, கோயம்பேடு, அரும்பாக்கம், அண்ணாநகர், திருமங்கலம், வடபழனி, அசோக்நகர், கோடம்பாக்கம், போரூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

புறநகர் பகுதிகளான தாம்பரம், மேடவாக்கம், துரைப்பாக்கம், பூந்தமல்லி, ஆவடி போன்ற பகுதிகளிலும் கனமழை பெய்தது.


Related Tags :
Next Story