கனமழை: திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
மழையின் காரணமாக திருப்பத்தூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
திருப்பத்தூர்,
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. இரவிலும் பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
இந்த நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story