நன்னிலம் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை


நன்னிலம் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை
x

நன்னிலம் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. நேற்றுடன் அக்னி நட்சத்திரம் முடிவடைந்தது. ஆனாலும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. இந்தநிலையில் நேற்று நன்னிலம், ஆலங்குடி, தென்குடி, பணங்குடி, ஆண்டிபந்தல், மகிழஞ்சேரி அச்சுதமங்கலம், ஸ்ரீவாஞ்சியம், முடிகொண்டான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இந்த மழை 1 மணிநேரம் நீடித்தது. இந்த மழை காரணமாக சாலையில் உள்ள மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும் சில மின்கம்பங்கள் சாய்ந்தன. தகவல் அறிந்ததும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து முறிந்து விழுந்த மரங்கள், சாய்ந்த மின்கம்பங்கள் ஆகியவற்றை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.


Related Tags :
Next Story