வால்பாறையில் இடியுடன் கனமழை


வால்பாறையில் இடியுடன் கனமழை
x
தினத்தந்தி 2 May 2023 12:15 AM IST (Updated: 2 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் இடியுடன் கனமழை

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை பகுதியை பொறுத்தவரை மே மாதத்தில் கோடை மழை பெய்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் வாரத்தில் இருந்தே விட்டு விட்டு மழை பெய்தது.ஆனால் ஏப்ரல் மாதத்தில் தொடர்ந்து கனமழை பெய்தது. நேற்று முன்தினம் இரவில் விட்டு விட்டு மழை பெய்து கொண்டிருந்தது. நேற்று பகலில் மதியம் 2 மணி முதல் 3.30 மணி வரை இடியுடன் கனமழை பெய்தது. வால்பாறை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கி விட்ட நிலையில் இந்த கோடை மழை வால்பாறை பகுதிக்கு வந்துள்ள சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக அமைந்துள்ளது. இந்த மழை காரணமாக வால்பாறை பகுதி முழுவதும் குளிர்ச்சியான காலசூழ்நிலை நிலவுகிறது. காலை முதல் கடுமையான வெயிலும், மதியத்திற்கு பிறகு கனமழையும் பெய்து வரும் காலசூழ்நிலை காரணமாக பச்சை தேயிலை உற்பத்தியும் அதிகரித்து வருவதால் தேயிலை விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Related Tags :
Next Story