குரங்கு நீர்விழ்ச்சியில் கடும் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை


குரங்கு நீர்விழ்ச்சியில் கடும் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
x

கோவையில் பெய்த கனமழை காரணமாக குரங்கு நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கோவை:

கோவை மாவட்டம் வால்பாறை பகுதிகளில் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது. தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டியது. இந்த மழையால் வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் புதிது புதிதாக நீர்வீழ்ச்சிகளும் தோன்றி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணை உள்ளது. அணைக்கு அருகே உள்ள வனப்பகுதிக்குள் கவியருவி(குரங்கு நீர்வீழ்ச்சி) உள்ளது. இந்த அருவியில் தண்ணீர் வரத்து இல்லாததால் கடந்த பிப்ரவரி மாதம் முதல் கவியருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் உள்ள கவியருவியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்படவில்லை.


Next Story