ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி


ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி
x

செஞ்சியில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

விழுப்புரம்

செஞ்சி,

செஞ்சி போக்குவரத்து காவல்துறை, செஞ்சி காவல்துறை மற்றும் ராயல் மெக்கானிக் சங்கம் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு மற்றும் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி செஞ்சியில் நடைபெற்றது. இதற்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்பாண்டைராஜன் தலைமை தாங்கினார். இதில் வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் முருகவேல் கலந்துகொண்டு மோட்டார் சைக்கிள் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்து ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும், போதை பொருளை தடுக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து விளக்கி பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பேரணியில் போலீசார் உள்ளிட்ட அனைவரும் ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் முக்கிய வீதிகள் வழியாக சென்று வந்தனர். இதில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பலராமன், முருகன், மோட்டார் வாகன பழுது பார்ப்போர் நலசங்கம் ரமேஷ் மற்றும் மெக்கானிக் சங்கத்தை சேர்ந்தவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story