இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்


இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
x

இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

சனாதனத்துக்கு எதிராக பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து கறம்பக்குடியில் இந்து முன்னணி சார்பில் சீனி கடைமுக்கம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் அசோக்குமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அமைச்சருக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட செயலாளர் கருப்பையா, நகர தலைவர் குழந்தை உள்பட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story