இந்து முன்னணியினர் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்


இந்து முன்னணியினர் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Sept 2023 2:00 AM IST (Updated: 8 Sept 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து இந்து முன்னணியினர் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் 188 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து இந்து முன்னணியினர் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் 188 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆர்ப்பாட்டம்

சனாதனம் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்து இருந்தார். அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரை கண்டித்தும் பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நேற்று மாலை இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ரவி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் அண்ணதுரை கலந்துகொண்டு பேசினார்.

கைது

ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். எனினும், அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், இந்து முன்னணியினர் 188 பேரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் மாநில செயலாளர் அண்ணாத்துரை நிருபர்களிடம் கூறும்போது, சனாதன தர்மம் பற்றி தமிழக மக்கள் மத்தியில் ஒரு தவறான கருத்தினை பரப்பி வருகின்றனர். சனாதன தர்மமும் இந்து மதமும் வேறு, வேறு அல்ல. திராவிட மாடல் என்பது முழுக்க, முழுக்க இந்துக்களுக்கு எதிரானது என்றார்.


Next Story