'இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில் திருத்தம் தேவை' - திருமாவளவன் கருத்து


இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில் திருத்தம் தேவை - திருமாவளவன் கருத்து
x

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டியது அவசியம் என திருமாவளவன் தெரிவித்தார்.

சென்னை,

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் கூறியதாவது;-

"சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளுக்கு மாறாக பிறப்பையும், ஆகம விதிகளையும் அளவுகோலாக கொண்டு நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் தீர்ப்பு வழங்கியிருப்பது தமிழ்நாடு அரசின் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்திற்கு எதிரானது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டிற்கு சென்றுள்ளது.

இருப்பினும் ஏற்கனவே இருக்கும் இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் திருத்தம் கொண்டு வர வேண்டியது அவசியம்."

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


1 More update

Next Story