சிவகாசிக்கு வந்த ஆசிய ஆக்கி சாம்பியன்ஷிப் கோப்பை - கலெக்டர், எம்.எல்.ஏ. தலைமையில் உற்சாக வரவேற்பு


சிவகாசிக்கு வந்த ஆசிய ஆக்கி சாம்பியன்ஷிப் கோப்பை - கலெக்டர், எம்.எல்.ஏ. தலைமையில் உற்சாக வரவேற்பு
x

ஆசிய ஆக்கி சாம்பியன்ஷிப் கோப்பை இன்று சிவகாசிக்கு கொண்டுவரப்பட்டது.

சிவகாசி,

ஆசிய ஆக்கி சாம்பியன்ஷிப் கோப்பை விளையாட்டுப் போட்டி வரும் ஆகஸ்ட் 3-ந்தேதி தொடங்கி 12-ந்தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான வெற்றிக் கோப்பையை முன்னிலைப்படுத்தி ஆக்கி போட்டி குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது.

இதையடுத்து ஆசிய ஆக்கி சாம்பியன்ஷிப் கோப்பையை நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லும் சுற்றுப்பயணத்தை மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் கடந்த 13-ந்தேதி தொடங்கி வைத்தார். அந்த வகையில் இன்று சிவகாசிக்கு வருகை தந்த இந்த கோப்பைக்கு மாவட்ட கலெக்டர், எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.Next Story