தொடர் விடுமுறை:குரங்கு நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள்


தொடர் விடுமுறை:குரங்கு நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 26 Dec 2022 12:15 AM IST (Updated: 26 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தொடர் விடுமுறை காரணமாக குரங்கு நீர்வீழ்ச்சியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

தொடர் விடுமுறை காரணமாக குரங்கு நீர்வீழ்ச்சியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

குரங்கு நீர்வீழ்ச்சி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் வனப்பகுதியில் குரங்கு (கவியருவி) நீர்வீழ்ச்சி உள்ளது. முக்கிய சுற்றுலா தளமாக விளங்கும் ஆழியாருக்கு கோவை மாவட்டமின்றி அருகில் உள்ள திருப்பூர், ஈரோடு, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரள மாநிலத்தில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் குரங்கு நீர்வீழ்ச்சி உள்ளது.

இதனால் சுற்றுலா பயணிகள் அங்கு சென்று குரங்கு அருவியில் ஆனந்தமாக குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்து செல்கின்றனர். தொடர்ந்து பள்ளி விடுமுறை, ஐயப்ப பக்தர்களின் வருகை, கிறிஸ்துமஸ் பண்டிகை உள்ளிட்ட பல்வேறு விடுமுறைகளால் நேற்று குரங்கு நீர்வீழ்ச்சிக்கு நேற்று அதிகாலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் வரத்தொடங்கினர்.

தீவிர கண்காணிப்பு

தற்போது குரங்கு நீர்வீழ்ச்சிக்கு நீர் வரும் வனப்பகுதியில் மழை இல்லாததால் அருவியில் குறைந்த அளவு தண்ணீர் விழுந்தது.

ஆனாலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குரங்கு அருவியில் குளித்து மகிழ்ந்து சென்றனர். மேலும் தொடர்விடுமுறை யொட்டி சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தையொட்டி ஆழியார் முதல் குரங்கு நீர்வீழ்ச்சி வரை கார், பஸ், வேன் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் குவிந்தன. பாதுகாப்புக்கான ஏற்பாடுகளில் ஆழியாறு போலீசார் மற்றும் பொள்ளாச்சி வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story