பிரதமர் மோடிக்கு பொன்னாடை அணிவித்த மதுரை ஆதீனம்...


பிரதமர் மோடிக்கு பொன்னாடை அணிவித்த மதுரை ஆதீனம்...
x

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார்.

மதுரை,

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' பாத யாத்திரை மேற்கொண்டு வந்தார். இதன் நிறைவு நிகழ்ச்சி திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் நடைபெற்றது. இதையடுத்து பல்லடம் மாதப்பூரில் 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை நிறைவு விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

இதனை தொடர்ந்து மதுரை வந்த பிரதமர் மோடி சிறு , குறு நடுத்தர டிஜிட்டல் கருத்தரங்கில் கலந்துகொண்டு உறையாற்றினார். தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார்.

முன்னதாக பிரதமர் மோடிக்கு, மதுரை ஆதீனம் பொன்னாடை அணிவித்தார்.


Next Story