ஓட்டல், காய்கறிக்கடையில் ரூ.75 ஆயிரம் திருட்டு


ஓட்டல், காய்கறிக்கடையில்   ரூ.75 ஆயிரம் திருட்டு
x

குழித்துறையில் ஓட்டல், காய்கறிக்கடையில் ரூ.75 ஆயிரம் திருடி சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

களியக்காவிளை:

குழித்துறையில் ஓட்டல், காய்கறிக்கடையில் ரூ.75 ஆயிரம் திருடி சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

ஓட்டல்-காய்கறிக்கடை

குழித்துறை பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக காய்கறி மொத்தக்கடை உள்ளது. இதை ராஜன் என்பவர் நடத்தி வருகிறார். அதன் அருகில் ஓட்டல் ஒன்றும் உள்ளது.

நேற்று முன்தினம் வழக்கம் போல் காய்கறிக்கடையை ராஜன் பூட்டி விட்டு சென்றார். அதன்பிறகு காய்கறி கடையின் மேற்கூரையை உடைத்து ஒரு மர்ம ஆசாமி உள்ளே புகுந்தார். அவர் காய்கறிக்கடையில் இருந்த பணத்தை திருடினார்.

பின்னர் பின்புற சுவர் வழியாக ஏறி குதித்து அருகில் உள்ள ஓட்டலுக்குள் மர்ம ஆசாமி சென்றார். அங்கு இருந்த பணத்தையும் திருடி சென்று விட்டார்.

போலீஸ் தேடுகிறது

இதுபற்றி ராஜன் களியக்காவிளை போலீசில் புகார் செய்தார். அதில் கடையில் இருந்து ரூ.70 ஆயிரம் மற்றும் 2 கேமராக்கள் திருட்டு போனதாக குறிப்பிட்டு இருந்தார். அதே போல் ஓட்டல் உரிமையாளர் முகமது ரிப்பாய் கொடுத்த புகாரில் ரூ.5 ஆயிரம் திருட்டு போனதாக குறிப்பிட்டு இருந்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் கடை மற்றும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது மர்ம ஆசாமி குழித்துறை தபால் நிலையம் சந்திப்பு பகுதியில் இருந்து நடந்து வந்ததும், கடைக்குள் புகுந்து திருடும் காட்சிகளும் பதிவாகி இருந்தது.

2-வது முறை

இந்த காட்சிகளின் அடிப்படையில் மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.

தற்போது திருட்டு நடந்த ஓட்டலில் 9 மாதங்களுக்கு முன்பு புகுந்த மர்ம ஆசாமி ரூ.18 ஆயிரத்தை திருடி சென்றது குறிப்பிடத்தக்கது.


Next Story