வீடு புகுந்து 4 பவுன் நகை திருட்டு


வீடு புகுந்து 4 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 9 April 2023 12:15 AM IST (Updated: 9 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் வீடு புகுந்து 4 பவுன் நகை திருடியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தூத்துக்குடி

தூத்துக்குடி சந்தனமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சேகர் (வயது 53). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 6-ந் தேதி வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கி உள்ளார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் மேஜையில் வைத்திருந்த 4 பவுன் தங்க வளையல்களை திருடிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வடபாகம் ேபாலீஸ் நிலையத்தில் சேகர் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story