கடலில் மாயமான எத்தனை மீனவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது?- மத்திய அரசு பதில் அளிக்க நீதிபதி உத்தரவு


கடலில் மாயமான எத்தனை மீனவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது?- மத்திய அரசு பதில் அளிக்க நீதிபதி உத்தரவு
x

கடலில் மாயமான எத்தனை மீனவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து மத்திய அரசு பதில் அளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

மதுரை


ராமேசுவரத்தை சேர்ந்த மல்லிகா மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், எனது கணவர் ராமேசுவரத்தில் இருந்து 4 மீனவர்களுடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றார். கடலில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையில் கடலில் மூழ்கி விட்டார். அவர் கடலில் மாயமாகி 7 ஆண்டு ஆன பிறகும் அவரை பற்றி எந்த தகவலும் இல்லை. எனவே, எங்களது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் கோரிக்கை தொடர்பாக மத்திய அரசின் மீனவர் கூட்டுறவு சங்கத்துக்கு இழப்பீடு கேட்டு மனு அனுப்பியுள்ளோம். இதுவரை எந்த தகவலும் இல்லை என்று மாநில மீன்வளத்துறை சார்பில் ஆஜரான வக்கீல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, கடலில் மீன்பிடிக்க சென்றபோது மாயமான மீனவர்களுக்கு இழப்பீடு வழங்க கோரி மாநில மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுப்பிய மனுக்கள் எத்தனை? இதில் எத்தனை மனுக்களின் பேரில் மீனவர்கள் குடும்பத்துக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்கி உள்ளது? என கேள்வி எழுப்பிய நீதிபதி, தற்போது வரை எத்தனை மனுக்கள் நிலுவையில் உள்ளன? என்பது குறித்தும், மத்திய மீன்வளத்துறை மற்றும் மீனவர் நலத்துறை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.


Next Story