'மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி முடிக்க இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்?' - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி

Image Courtesy : @Udhaystalin
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி முடிக்க இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை,
தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது 'எக்ஸ்' சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
"மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிக்கான முன் டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கான விண்ணப்ப கால அவகாசத்தை மூன்றாவது முறையாக நீட்டித்துள்ளது ஒன்றிய அரசு.
ஒன்றிய அரசு ஒற்றை செங்கலை வைத்து நான்கு ஆண்டுகள் கடந்த பிறகும் கட்டுமானப் பணிக்காக முன் டெண்டருக்கே இத்தனை கால தாமதம் ஆகிறது என்றால் மருத்துவமனையை கட்டி முடிக்க இன்னும் எத்தனை ஆண்டுகளாகும்?
எய்ம்ஸ் கட்டுமானப் பணியை தாமதப்படுத்தி தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய அரசுக்கு வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்."
இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
#MaduraiAIIMS மருத்துவமனையின் கட்டுமானப் பணிக்கான முன் டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கான விண்ணப்ப கால அவகாசத்தை மூன்றாவது முறையாக நீட்டித்துள்ளது ஒன்றிய அரசு.
ஒன்றிய அரசு ஒற்றை செங்கலை வைத்து நான்கு ஆண்டுகள் கடந்த பிறகும் கட்டுமானப் பணிக்காக முன் டெண்டருக்கே இத்தனை கால… pic.twitter.com/11CahCeuP5






