சென்னையில் இருந்து உங்கள் ஊருக்கு கட்டணம் எவ்வளவு..? - இதையும் கொஞ்சம் தெரிஞ்சிகோங்க


சென்னையில் இருந்து உங்கள் ஊருக்கு கட்டணம் எவ்வளவு..? - இதையும் கொஞ்சம் தெரிஞ்சிகோங்க
x

கோப்புப்படம் 

சென்னையில் இருந்து முக்கிய நகரங்கள் செல்ல, ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் நிர்ணயம் செய்த கட்டண விபரங்களை காணலாம்.

சென்னை,

சென்னையில் இருந்து முக்கிய நகரங்கள் செல்ல, ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் நிர்ணயம் செய்த கட்டண விபரங்களை காணலாம். ஆம்னி பேருந்துகளுக்கான அதிகபட்ச கட்டண பட்டியலை பேருந்து உரிமையாளர்கள் ஏற்கனவே வெளியிட்டுள்ளனர்.

அதன்படி சென்னையில் இருந்து கோவைக்கு ஏசி அல்லாத பேருந்துகளில் குறைந்தப்பட்ச கட்டணம் ஆயிரத்து 815 ரூபாய் எனவும், வால்வோ ஸ்லீப்பர் பஸ்சில் அதிகபட்ச கட்டணம் 3 ஆயிரத்து 25 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து மதுரைக்கு சாதா பேருந்தில் குறைந்தபட்ச கட்டணம் ஆயிரத்து 776 ரூபாயாகவும் வால்வோ ஸ்லீப்பரில் 2 ஆயிரத்து 688 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்காசிக்கு சாதாரண பேருந்தில் 2 ஆயிரத்து 79 ஆகவும் வால்வோ ஸ்லீப்பரில் 3 ஆயிரத்து 465 ரூபாய் ஆகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சேலத்திற்கு குறைந்தப்பட்ச கட்டணம் ஆயிரத்து 435 ரூபாயாகவும் அதிகபட்ச கட்டணமாக ஆயிரத்து 995 ரூபாய் ஆகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலிக்கு குறைந்தப்பட்ச கட்டணம் 2 ஆயிரத்து 63 ரூபாயாகவும், அதிகபட்சமாக 3437 ரூபாயும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


Next Story