பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்வது எப்படி?


பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்வது எப்படி?
x
தினத்தந்தி 13 Oct 2023 7:45 PM GMT (Updated: 13 Oct 2023 7:45 PM GMT)

பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்வது எப்படி? என்பது குறித்து கூடலூரில் நடந்த செயல்விளக்க பயிற்சி முகாமில் தீயணைப்பு வீரர்கள் தத்ரூபமாக நடித்து காண்பித்தனர்.

நீலகிரி

பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்வது எப்படி? என்பது குறித்து கூடலூரில் நடந்த செயல்விளக்க பயிற்சி முகாமில் தீயணைப்பு வீரர்கள் தத்ரூபமாக நடித்து காண்பித்தனர்.

செயல்விளக்க பயிற்சி

ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 13-ந் தேதி சர்வதேச பேரிடர் தடுப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று காலை 10.30 மணிக்கு சர்வதேச பேரிடர் தடுப்பு தினத்தையொட்டி கூடலூர் தீயணைப்பு துறை சார்பில் தாலுகா அலுவலகம் முன்பு வருவாய்த்துறையினர் மற்றும் பொதுமக்களுக்கு பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செயல்முறை விளக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.

தடுப்பு நடவடிக்கைகள்

இதற்கு தீயணைப்பு நிலைய அலுவலர் மார்ட்டின் தலைமை தாங்கினார். தாசில்தார் ராஜேஸ்வரி தொடங்கி வைத்தார். முகாமில் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து தீயணைப்பு வீரர்கள் தத்ரூபமாக செயல்முறை விளக்கம் மூலம் நடித்து காண்பித்தனர். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

ஒத்துழைப்பு அவசியம்

இதுகுறித்து தீயணைப்பு நிலைய அலுவலர் மார்ட்டின் கூறும்போது, நீலகிரியில் சூறாவளி காற்று, மழை வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடர் நிகழ்வுகள் நடைபெறுகிறது. இந்த சமயத்தில் மக்களை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டும். அதற்கு அவர்களது ஒத்துழைப்பும் அவசியம். இதற்காக பொதுமக்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கிறோம். இதன் மூலம் பேரிடர் சமயத்தில் உரிய தடுப்பு நடவடிக்கைகளை இணைந்து மேற்கொள்ள முடியும் என்றார்.


Next Story