மரவள்ளி பயிரில் செம்பேன் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி


மரவள்ளி பயிரில் செம்பேன் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி
x
தினத்தந்தி 9 Oct 2022 6:45 PM GMT (Updated: 9 Oct 2022 6:45 PM GMT)

மரவள்ளி பயிரில் செம்பேன் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி தோட்டக்கலை துறை அதிகாரி விளக்கம்

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்

சின்னசேலம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்தில் 3 ஆயிரத்து 500 ஹெக்டேர் பரப்பளவில் விவசாயிகள் மரவள்ளி பயிர் சாகுபடி செய்துள்ளனர். இந்த நிலையில் அதிக சேதாரத்தை ஏற்படுத்தும் செம்பேன் பூச்சிகள் மரவள்ளி செடியில் அதிக அளவில் காணப்படுகிறது. இந்த பூச்சிகள் இலைகளில் உள்ள சாற்றை உறிஞ்சுவதால் செடிகளின் வளர்ச்சி தடை போட்டு மகசூல் பாதிக்கிறது.

மரவள்ளி பயிரில் செம்பேன் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த வயலை எப்போதும் ஈரமாகவே வைத்திருக்க வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில் அபாமெக்டின் 2.5 மிலி அல்லது ஸ்பீரோமெசிபின் 1.5 மிலி கலந்து கைத்தெளிப்பான் மூலம் மாலை நேரத்தில் செடி நனையும்படி ஒட்டு பசை சேர்த்து தெளிக்க வேண்டும். செடிகளில் மாவு பூச்சி இருந்தால் ஒரு லிட்டர் தண்ணீரில் அசாபிராக்டின் 5 மிலி அல்லது தயாமீத்தாகசாம் 25 கிராம் கலந்து தெளித்து மாவு பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். மேலும், விவரங்கள் அறிய மரவள்ளி விவசாயிகள் சின்னசேலத்தில் உள்ள தோட்டக்கலைத்துறை வட்டார அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story