திடீரென சென்னை ஏர்போர்ட்டில் தரையிறங்கிய பிரம்மாண்ட சரக்கு விமானம்..!


திடீரென சென்னை ஏர்போர்ட்டில் தரையிறங்கிய பிரம்மாண்ட சரக்கு விமானம்..!
x

உலகத்திலேயே மிகப் பெரிய சரக்கு விமானமான திமிங்கலம் வடிவிலான, "ஏா்பஸ் பெலுகா"என்ற சரக்கு விமானம், சென்னை விமானநிலையத்திற்கு, நேற்று இரவு 9.30 மணிக்கு வந்தது.

சென்னை,

உலகத்திலேயே மிகப் பெரிய சரக்கு விமானமான திமிங்கலம் வடிவிலான, "ஏா்பஸ் பெலுகா"என்ற சரக்கு விமானம், சென்னை விமானநிலையத்திற்கு, நேற்று இரவு 9.30 மணிக்கு வந்தது. இந்த விமானம் குஜராத்தில் இருந்து, தாய்லாந்து செல்லும் வழியில், எரிபொருள் நிரப்புவதற்காக சென்னையில் தரையிறங்கி, எரி பொருள் நிரப்பியது.

பின்னர் சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலை ஒன்றரை மணிக்கு மீண்டும் விமானம் டேக் ஆப் செய்தது. ஏற்கனவே, கடந்தாண்டு ஜூலை 11-ம் தேதி, இதேபோல் எரிபொருள் நிரப்புவதற்காக முதல்முறையாக சென்னை வந்தது.

சென்னை விமான நிலையத்தில் இருந்த ஏர்பஸ் பெலுகா விமானம் அங்கு இருந்த ஊழியர்களை கவர்ந்தது. விமான பணியாளர்கள், ஏன் சில விமானிகள் கூட இந்த ஏர்பஸ் பெலுகா விமானத்தை வந்து பார்த்து சென்றனர். ஏர்பஸ் பெலுகா விமானம் டேக் அப் மற்றும் லேண்டிங்கின் போது அதிக ஒலி எழுப்பும். நேற்றும் இந்த விமானம் தரையிறங்கிய போது அதிக சத்தம் வந்தது.

இந்த விமானம் எரிபொருள் இல்லாமலே 86,500 கிலோ எடை கொண்டது ஆகும். 864.36 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்ட இந்த விமானம், சராசரியாக 150 டன் வரை சரக்கு ஏற்றி செல்லும். ஏர்பஸ் பெலுகா 56.15 மீட்டர் நீளம், 44.84 நீள இறக்கைகள், கொண்டது ஆகும். இந்த விமானம்தான் நேற்று சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. சென்னைக்கு எந்த சரக்கையும் இறக்குமதி செய்ய விமானம் வரவில்லை.


Next Story