தேவகோட்டையில் மனித சங்கிலி போராட்டம்
தேவகோட்டையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
தேவகோட்டை
தலித் கிறிஸ்தவர்களை பட்டியலினத்தில் சேர்க்க வலியுறுத்தி சிவகங்கை மறைமாவட்ட தலித் பணிக்குழுவின் சார்பில் தேவகோட்டை ராம்நகரில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. செயலர் அமல்ராஜ் தலைமை தாங்கினார். போராட்டத்தை வியான்னி அருள்பணி மைய இயக்குனர் அமலன் தொடங்கி வைத்து பேசினார். இதில் மண்டல ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், தமிழக அரசின் சிறுபான்மை ஆணைய உறுப்பினர் பிக்குமவுரியா, காந்திய சமூக கிராம சங்கம் இயக்குனர் சிரில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் இளைய கவுதமன், தேவகோட்டை நகரச் செயலாளர் அமுதன், கவுரவ ஆலோசகர் ஆல்பர்ட்ராஜ் ஆகியோர் கவன ஈர்ப்பு உரை நிகழ்த்தினர். முடிவில் ஜெபமாலை மேரி நன்றி கூறினார்.இந்த மனிதச் சங்கிலி உரிமை போராட்டத்தில் தலித் பணிக்குழுவின் பொதுக்குழு நிர்வாகிகள், கண்காணிப்பு குழு நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், மக்கள் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.