மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் மாநிலத்தில் நடந்த பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆத்தூர் பழைய பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சேலம்
ஆத்தூர்:-
மணிப்பூர் மாநிலத்தில் நடந்த பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆத்தூர் பழைய பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.சேலம் மாவட்ட தலைவர் ஜாகிர் உசேன் தலைமை தாங்கினார். தர்மபுரி சாதிக் பாஷா சிறப்புரை ஆற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. நகர செயலாளர் கே.பாலசுப்பிரமணியம், பொருளாளர் ராமச்சந்திரன், நகர அவைத்தலைவர் மாணிக்கம், முன்னாள் கவுன்சிலர் ஸ்டாலின், திராவிடர் கழக மாவட்ட தலைவர் வானவில், விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் கவுன்சிலர் நாராயணன், மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் ஓசுமணி, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் கோபால் ராசு உள்பட பலர் கலந்து கொண்டு மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story