வரதட்சணை கொடுமை கணவர் கைது


வரதட்சணை கொடுமை கணவர் கைது
x
தினத்தந்தி 10 Aug 2023 12:15 AM IST (Updated: 10 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வரதட்சணை கொடுமை கணவர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம்

கமுதி,

கமுதி அருகே உள்ள செங்கப்படையை சேர்ந்தவர் வழி விட்டான் மகன் சதீஷ்குமார்(வயது28). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த முகிலா(20) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஒரு குழந்தையும் உள்ளது. முகிலா தற்போது 5 மாத கர்ப்பிணியாகவும் உள்ளார். இதற்கிடையில் முகிலாவிடம் 30 பவுன் நகைகள், 5 லட்சம் ரூபாய் பெற்றோர் வீட்டில் இருந்து வாங்கி வருமாறு சதீஷ்குமார், மாமியார் பாண்டியம்மாள், உறவினர்கள் மலைச்சாமி, பஞ்சவர்ணம் ஆகியோர் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்தனர்.


Next Story