கபிலனை ஆற்றுப்படுத்த சொற்களின்றி தவிக்கிறேன் - கவிஞர் கபிலனின் மகள் தூரிகை மறைவுக்கு சீமான் இரங்கல்


கபிலனை ஆற்றுப்படுத்த சொற்களின்றி தவிக்கிறேன் - கவிஞர் கபிலனின் மகள் தூரிகை மறைவுக்கு சீமான் இரங்கல்
x
தினத்தந்தி 10 Sept 2022 9:32 AM IST (Updated: 10 Sept 2022 10:00 AM IST)
t-max-icont-min-icon

திரைப்பட பாடலாசிரியர் மற்றும் கவிஞர் கபிலனின் மகள் தூரிகை மறைவுக்கு சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பிரபல திரைப்பட பாடலாசிரியர் மற்றும் கவிஞர் கபிலனின் மகள் தூரிகை (வயது 28) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூரிகை முன்னணி ஆங்கில ஊடகத்தில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர், "பீயிங் வுமன்" (Being Women) என்னும் இணைய இதழையும் தொடங்கி, நடத்தி வந்தார்.

எழுத்தாளராக மட்டுமில்லாமல் தூரிகை, ஆடை வடிவமைப்பாளராகவும் பல்வேறு திரைப்படங்களில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவரின் தற்கொலை சினிமா மற்றும் எழுத்தாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கவிஞர் கபிலனின் மகள் தூரிகை மறைவுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பதிவில்,

புகழ்பெற்ற திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞருமான அன்புத்தம்பி கபிலன் அவர்களின் மகள் தூரிகை அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மனத்துயரமும் அடைந்தேன்.

தன் உயிருக்கினிய அன்புமகளைப் பறிகொடுத்துவிட்டு, பேரிழப்பில் சிக்கித்தவிக்கும் தம்பியை ஆற்றுப்படுத்தவும் தேற்றவும் சொற்களின்றி கலங்கித்தவிக்கிறேன். கொடுந்துயரில் சிக்குண்டிருக்கும் தம்பி கபிலனுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் ஆறுதலைத்தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


Related Tags :
Next Story