சிங்கப்பூர் வாழ் தமிழர்களின் பேரன்பில் நனைந்தேன்; நெஞ்சம் நெகிழ்ந்தேன்: முதல் -அமைச்சர் மு.க ஸ்டாலின்


சிங்கப்பூர் வாழ் தமிழர்களின் பேரன்பில் நனைந்தேன்; நெஞ்சம் நெகிழ்ந்தேன்: முதல் -அமைச்சர் மு.க ஸ்டாலின்
x

சிங்கப்பூர் வாழ் தமிழர்களின் பேரன்பில் நனைந்தேன்; நெஞ்சம் நெகிழ்ந்தேன் என்று முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர்,

உலக முதலீட்டாளர் மாநாடு அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. இதில் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் தொழில் அதிபர்களை பங்கேற்க செய்யவும், புதிய முதலீடுகளை ஈர்த்திடவும், புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வரவும் அரசுமுறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் பயணம் மேற்கொண்டார். இதன் தொடர்ச்சியாக சிங்கப்பூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று டமாசெக், செம்ப்கார்ப், கேப்பிட்டா லேண்ட் ஆகிய நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்கள் மற்றும் சிங்கப்பூர் மந்திரி ஈஸ்வரனையும் சந்தித்து பேசினார்.

அதன் பின்னர் அங்கு முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது.

இந்த நிலையில், முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-சிங்கப்பூர் வாழ் தமிழர்களின் பேரன்பில் நனைந்தேன்; நெஞ்சம் நெகிழ்ந்தேன். தமிழும் தமிழ்ப் பண்பாடும் காத்து வாழும் அவர்களின் அன்னை நிலமான தமிழ்நாட்டின் அன்போடு அவர்களிடையே உரையாற்றினேன்.உலகெங்கும் வாழும் தமிழர்களின் நலனையும் உரிமைகளையும் காக்க திராவிட முன்னேற்றக் கழகமும் தமிழ்நாடு அரசும் தொடர்ந்து செயல்படும் என்ற உறுதியை ஆழப் பதிந்தேன்" என்று பதிவிட்டுள்ளார்.


Next Story